தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, குன்னூர் கிராமத்தில் உள்ள செங்குளம், கருங்குளம் கண்மாயினை ஆக்கிரமித்து தனிநபர் அனுபவித்து வருகிறார். இதனை ஆக்கிரமிப்பினை அகற்றக்கோரி இதுவரை மூன்று முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்படி கிராமத்திற்கு சாலை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகளும், பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடைகளும் இல்லை. எவ்வித அடிப்படை வசதிகளும் கிடைக்கப்படுவதில்லை. எனவே எங்கள் கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிதரக் கோரியும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக கேட்டுக்கொண்டனர்.