தேனி மாவட்டம் குள்ளபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (21) வைகை அணையில் இருந்து வடுகபட்டிக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக குழாய்கள் பதிக்கும் பணியில் நேற்று (மார்ச் 14) ஈடுபட்டார். எதிர்பாராத விதமாக குடிநீர் குழாய் மின் கம்பியில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், முத்துப்பாண்டி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் முத்துப்பாண்டி உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து ஜெயமங்களம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மண் அள்ளும் இயந்திரம் ஓட்டிய டிரைவர் கோபாலகிருஷ்ணனிடம் விசாரித்து வருகின்றனர்.