தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு துணைத்தலைவர் ராதா ராஜேஷ், செயல் அலுவலர் குணாளன் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.