பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை திருமஞ்சனம், சுப்ரபாதம், திருப்பாவை மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சொர்க்க வாசலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் பெரியகுளம் பகுதியில் அதிகாலையில் இருந்து வருகை தந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.