தேனியில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்

63பார்த்தது
தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலை கண்டித்தும், நாம் தமிழர் கட்சியின் சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் தேனி பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென போலீசாரின் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி