தேனி பழைய பேருந்து நிலையம் அருகே தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் போலீசார் கைது செய்ததை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.