வீரபாண்டியை சேர்ந்தவர் சுப்புராஜ் (60). இவரது மகன் பூவேந்திரராஜாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணேசனுக்கும் முன்விரோதம் இருந்தது. இதன் காரணமாக பூவேந்திரராஜாவின் தந்தை சுப்புராஜுடன் கணேசன், வாக்குவாதம் செய்து அவரை அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வீரபாண்டி போலீசார் கணேசனை நேற்று (டிச. 21) கைது செய்தனர்.