தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீசாருக்கு, டெம்பு சேரி அரசு கால்நடை மருத்துவமனை பின்புறமுள்ள காலியிடத்தில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனிசெட்டிபட்டி போலீசார் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெருமாள் கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் (63 வயது) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 மது பாட்டில்கள் மற்றும் ரூ.5,420 ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.