தேனி மாவட்டம், கண்டமனூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாண்டியம்மாள் தலைமையிலான போலீசார் கண்டமனூர் வேலாயுதபுரம் ரோட்டில் சத்யா காலனி அருகே குற்றத் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவ்வாறு சென்ற போது கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த கண்டமனூர் சத்யா காலனி பகுதியை சேர்ந்த அஜித் குமார் (24 வயது) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.