தேவதானப்பட்டி அருகே பெண்ணை தாக்கியவர் கைது

73பார்த்தது
தேவதானப்பட்டி அருகே பெண்ணை தாக்கியவர் கைது
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே சேகுவார்பட்டி தியேட்டர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மோகன் என்பவரது மனைவி முத்துராணி (35 வயது). மோகன் மாமியார் ராஜம்மாளுக்கும், அவரது அண்ணன் சின்னன் மகன் கருப்பையாவிற்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்தது.

இந்த நிலையில், முத்துராணியை அவதூறாக பேசி கருப்பையா கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் முத்துராணி மண்டை உடைந்து பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், தேவதானப்பட்டி போலீசார் கருப்பையாவை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி