தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக் கிராமங்களில் தொழிலாளர்கள் குடியிருப்பு, பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனைக்குச் செல்லும் குடிநீர் குழாய் இணைப்பு சேதம் அடைந்து குடிநீர் வராததால் மலை கிராம மக்கள் கடந்த சில நாட்களாக மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி அரசு பஸ்ஸை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு நிலவியது.