தேனி மாவட்டம், வருசநாடு அருகே உப்புத்துறை பகுதியைச் சேர்ந்த சின்னக்கருப்பன் (48 வயது) விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வனச்சரகத்தில் வனகாவலராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வருசநாடு அருகே கோட்டைமலை பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றுள்ளனர். அப்போது காட்டெருமை விரட்டிய நிலையில் சின்னக்கருப்பனை முட்டித் தாக்கியுள்ளது. தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சின்னக்கருப்பன் நேற்று (மார்ச் 23) உயிரிழந்தார். கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.