பெரியகுளத்தில் இலவச மருத்துவ முகாம்

85பார்த்தது
பெரியகுளத்தில் இலவச மருத்துவ முகாம்
பெரியகுளம் எல்ஐசி கிளை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், மதுரை அப்பொலோ மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம். 

தேனி மாவட்டம் பெரியகுளம் எல்ஐசி கிளை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கமும், மதுரை அப்பொலோ மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாம் பெரியகுளம் எல்ஐசி அலுவலக கிளை அலுவலகத்தில் கிளை நிர்வாக அலுவலர் ரவி தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்கள் உடல் பரிசோதனை செய்துகொண்டனர். 

இந்நிகழ்வில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகிகள் சசிக்குமார், கரந்தமலை, நாகபாண்டி, மகளிர் பொறுப்பாளர் ஷிலாதேவி மற்றும் மகளிர் தோழர்கள், ஊழியர்கள், அலுவலர்கள், வளர்ச்சி அலுவலர்கள், எல்ஐசி முகவர்கள் மற்றும் பாலிசிதாரர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். நிறைவாக அப்பொலோ மருத்துவமனை குழு சார்பாக சசிக்குமார் நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி