தேனி அல்லிநகரம் கிராம நிர்வாக அதிகாரி தனது உதவியாளருடன் புதிய பஸ்நிலையத்தில் ரோந்து சென்றார். அப்போது அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த வீரபாண்டியை சேர்ந்த மணிமாறன் என்பவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் க. விலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.