கம்பம் சிக்னல் அருகே போக்குவரத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்த டிஎஸ்பி
தேனி மாவட்டம் கம்பம் சிக்னல் ஸ்டாப்பில் போக்குவரத்து காவல் துறையினருக்கு புதிதாக அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையை உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் செங்கோட்டுவேலவன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமார், தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி மற்றும் போக்குவரத்து காவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.