தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான தேனி கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் விலங்கின மரபியல் மற்றும் இனப்பெருக்க துறை சார்பில் மண்டல அளவிலான கோம்பை நாய் மரபியல் வள பாதுகாப்பு கருத்தரங்கம் மற்றும் நாய்கள் கண்காட்சி (அனைத்து நாட்டின மற்றும் அயல் இன நாய் இனங்கள்) மற்றும் செல்லப்பிராணிகள் நல முகாம் இன்று (18-3-2025) காலை 10:30 மணியளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கல்லூரியின் விலங்கின மரபியல் மற்றும் இனப்பெருக்க துறையின் தலைவரும் இளை பேராசிரியருமான முனைவர் ர. செல்வம் வரவேற்புரையாற்றினார். இந்த கண்காட்சியை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் துவக்கி வைத்து, விழா மலரை வெளியிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை உரையாற்றினார். இந்த கண்காட்சியில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாய்கள் கலந்து கொண்டன. சிறப்பாக செயல்பட்ட கோம்பை நாய்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கேடயங்கள் வழங்கப்பட்டன.