தேனி வடக்கு ஒன்றியம் ஜங்கால்பட்டியில் பாக முகவர்கள் (BLA) மற்றும் பாக உறுப்பினர்களை (BLC) சமூக வலைதளத்தில் ஆக்கபூர்வமாக செயல்படுத்துவதற்கு குறித்து ஆலோசனைக் கூட்டம், தேனி வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் ராமதாஸ் தலைமையில், தேனி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சக்கரவர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தேனி வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முருகேசன், ஒன்றிய பொருளாளர் அரியமுத்து, மாவட்ட பிரதிநிதி பழனிராம், மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், பாக முகவர்கள் BLA BLC மற்றும் சார்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.