தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே டி. வாடிப்பட்டி சாவடி தெருவை சேர்ந்தவர் வெற்றி (40 வயது). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவர் சம்பவ தினத்தன்று செல்போன் பேசிய படியே மாடியில் நின்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வெற்றி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.