தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் கீழவடகரை ஊராட்சி அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் இன்று (டிச.27) மிஷன் சக்தி எனும் தலைப்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது, பெண் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ், துணைத் தலைவர் ராஜசேகர், நகராட்சி ஆணையாளர் தமிகா சுல்தானா, ஊராட்சி செயலர் லெனின் மகளிர் குழுவைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்