தேனி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் மக்களுக்காக சிறப்பு கிராம சபை கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தேனி மாவட்டம் ராஜக்கால்பட்டி ஊராட்சியில் உள்ள கதிர்வேல்புரம், போடி ஊராட்சிக்கு உட்பட்ட அகமலை ஊராட்சியில், மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட நொச்சி ஓடை, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எண்டப்புளி ஊராட்சியில் உள்ள நேரு நகர், தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பழங்குடியினர் மக்களுக்காக ஜூன் 8ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.