அனைத்து பகுதிகளிலும் தமிழக அரசின் சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் பச்சரிசி, சர்க்கரை, முழுக் கருப்பு அடங்கிய பொங்கல் தொகுப்பை நகர்மன்ற உறுப்பினர் சாதிக் அலி பொதுமக்களுக்கு வழங்கினார்.