தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலக வளாகத்தில், நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமை தாங்கினார். பெரியகுளம் நகராட்சி ஆணையாளர், குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குழந்தைகள் பாதுகாப்பு பணி மேற்கொள்வது குறித்தும், குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.