தேனி: வெற்றி பெற்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு

75பார்த்தது
தேனி: வெற்றி பெற்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு
தேனி மாவட்டம் கம்பத்தில் ராணாஸ் லாடபதி பயிற்சி பட்டறை மாணவர்களுக்கு பெற்றோர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உலக விளையாட்டு சங்கம் WSSA சார்பாக கோயம்புத்தூரில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற இன்டர்நேஷனல் சிலம்ப சாம்பியன்ஷிப் 2024 போட்டி திங்கட்கிழமை வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த இன்டர்நேஷனல் போட்டிக்கு 7 நாடுகள் அதாவது இலங்கை, ரஷ்யா, மலேசியா, துபாய், இந்தியா, யூயே, லண்டன், உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து ஏராளமான ஆசான்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். கம்பத்திலிருந்து ஆசான் ராணாஸ் செந்தில், , நிவேதா ராணாஸ் தலைமையில் 23 மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் 9 தங்கம் பதக்கங்கள், 12வெள்ளி பதக்கங்கள், வெங்கலம் 24 பதக்கங்கள் என வென்று நமது இந்தியாவிற்கும் செப்பேடு புகழ்பெற்ற தேனி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் கம்பம் வாழ் பொதுமக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி