தேனியில் செல்போன் திருடர்கள் கைது

61பார்த்தது
தேனியில் செல்போன் திருடர்கள் கைது
தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன் (50) ஆட்டோ டிரைவர். கர்னல் ஜான் பென்னிகுக் பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நேற்று அதிகாலை நின்றிருந்தார். அலைபேசியை ஆட்டோவில் வைத்துவிட்டு அருகில் இருந்த நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். 

அங்கு வந்த பெரியகுளம் அழகர்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தானம் (27), பள்ளிவாசல் மேற்கு தெருவைச் சேர்ந்த நூர் முகமது (22 ) ஆகிய இருவரும் ரகுநாதரிடம் பேச்சு கொடுத்து ஆட்டோவில் இருந்து அலைபேசியை எடுத்துக் கொண்டு ஓடினர். அங்கிருந்தவர்கள் பிடித்து தேனி போலீசில் ஒப்படைத்தனர். ரகுநாதன் புகாரின் பேரில் தேனி நகர் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி