தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை நூற்றாண்டு நூலகத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. ஏராளமான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. நூலக வாசகர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்று புத்தகங்களை வாங்கிச் சென்றனர். பெரியகுளம் மக்கள் மன்ற தலைவர் மருத்துவர் இளங்கோவன் புத்தக கண்காட்சியில் பங்கேற்று ரூ 1500/- மதிப்பிலான புத்தகங்களை வாங்கிச் சென்றார்.