போடி: டூ வீலர் விபத்து வாலிபர் பலி; சிறுவன் படுகாயம்

73பார்த்தது
போடி: டூ வீலர் விபத்து வாலிபர் பலி; சிறுவன் படுகாயம்
தேனி மாவட்டம், போடி அருகே உள்ள கோணாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் ஹரி கிருஷ்ணன் (வயது 19). சம்பவ தினத்தன்று தனது உறவினர் ராஜதுரை என் மூன்று வயது மகன் யுவனேஷ் என்ற சிறுவனை டூவீலரில் அமர வைத்து குளத்துக்கரை அருகே சென்று கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக டூவீலர் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஹரி கிருஷ்ணன் உயிரிழந்தார். சிறுவன் யுவனேஷ் படுகாயம் அடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி