தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மழையை எதிர்கொள்ளும் விதமாக பேரூராட்சியின் சார்பில் மணல் மூட்டைகள், கடப்பாரை, மண்வெட்டி, மரக்கம்புகள் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ள தடுப்பு கருவிகளை ஒழுங்குபடுத்தி தற்போது ஆயத்த பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளில் செயல் அலுவலர் சுருளி வேல், ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா மற்றும் சுகாதார ஆய்வாளர் கணேசன், தலைமை கணக்காளர் ஜியோ கான், பணியாளர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.