தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, ஆண்டிபட்டி போலீசார் வேலப்பர் கோயில் பகுதியில் குற்றத்தடுப்பு சம்பந்தமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆண்டிபட்டி கொப்பையம்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் (51 வயது) என்பவர் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் முருகன் என்பவரை கைது செய்தனர். லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.