தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு இந்து எழுச்சி முன்னணியினர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் முத்துசித்ரா மற்றும் நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமரன் ஆகியோரை, இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில், மாவட்ட செயலாளர். இராமமூர்த்தி, EB. மணிகண்டன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது, மாவட்ட தலைவர் இராமராஜ், மருத்துவமனை நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் மத்தியில் தாங்கள் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மருத்துவமனை மீது நன்மதிப்பு அதிகரித்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்தார். சந்திப்பிற்கான ஏற்பாடுகளை உயிரியல் மருத்துவ பொறியாளர் இராஜேஷ்கண்ணா சிறப்பாக செய்திருந்தார்.