தேனிஅரசு மருத்துவர் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை முகாம் கலெக்டர் பங்கேற்பு
தேனி மாவட்டம் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று காலை பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெற்றோருடன் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்