முல்லை பெரியார் அணையில் முதல் போக பாசனத்திற்கு நீர் திறப்பு

59பார்த்தது
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 14 ஆயிரத்து 707 ஏக்கர் நன்செய் நிலங்களில் முதல் போக சாகுபடி நடைபெறும்.

இதற்கு முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீர் தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள், விவசாயத்திற்காகவும், குடிநீருக்காகவும், நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு சார்பில் தமிழர் கேரளா பகுதியில் அமைந்துள்ள தேக்கடியில் இருந்து பொதுப்பணித்துறை மதகை தமிழக விவசாயத்திற்கு குடிநீருக்கும் இயக்கப்படுவது வழக்கம்.

இதன் தொடர்ச்சியாக முல்லைப்பெரியார் அணையில் இருந்து 105 அடிக்கு மேல் நிரம்பி வரும் தண்ணீரை மட்டுமே தமிழகத்திற்கு கொண்டு செல்ல மதகு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதகு தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

அதன்படி இன்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகை திறந்து வைத்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கம்பம் பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் , அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி