சுருளி அருவியில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்தது

66பார்த்தது
சுருளி அருவியில் நீா்வரத்து குறைந்து காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் சுருளி அருவி உள்ளது. இந்த மலையில் உள்ள மேகமலை, மகாராஜாமெட்டு, ஹைவேவிஸ், தூவானம் போன்ற அடா்ந்த வனப் பகுதிகளில் பெய்யும் மழைநீரே சுருளிமலையில் அருவியாக கொட்டுகிறது.

இந்த அருவி ஆன்மிகம், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. ஆண்டு முழுவதும் இந்த அருவியில் நீா்வரத்து இருப்பதால், தமிழகம் உள்பட பிற மாநிலங்களிலிருந்து திரளான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து நீராடுவது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால், இந்தப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்து வருகிறது. இதனால், அருவிக்கு வரும் நீா்வரத்தும் படிப்படியாக குறைந்து வந்தது.

நிகழாண்டில், மழைப் பொழிவு சீராக இல்லாததால், அருவிக்கு வரும் நீா்வரத்து குறைந்துள்ளது. இதனால், இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி