சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காமாட்சிபுரம் ஊராட்சியில் அங்கம் வகித்து வரும் இந்து நாடார் துவக்க பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்து தலைமையில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற செயலாளர் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது நிறைகுறைகளை தெரிவித்தனர்.