கம்பம் கம்பராய பெருமாள் கோவில் வளாகத்தில் தேனி எம்பி ஆய்வு

83பார்த்தது
கம்பம் கம்பராய பெருமாள் கோவில் வளாகத்தில் திருமண மண்டப கட்டிடப் கட்டிடம் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டதால், தேனி எம்பி ஆய்வு செய்து மீண்டும் பணிகள் தொடர ஆலோசனை வழங்கினார்.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் கம்பராய பெருமாள் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது, இந்தக் கோவில் வளாகத்தில் பொதுமக்களின் வசதிக்காக 4 கோடியே 20 லட்சம் மதிப்பிலான திருமண மண்டபம் கட்டுவதற்காக கடந்த ஆண்டு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் பூமி பூஜை செய்து கட்டிட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நகர் ஊரமைப்பு துறை அனுமதி இல்லாமல் கோவில் வளாகத்தில் திருமண மண்டபம் கட்டப்படுவதால் அனுமதி மறுக்கப்பட்டு, கட்டிடப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனை அடுத்து தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் நேரில் ஆய்வு செய்து, திருமண மண்டப கட்டிடப் பணிகளை ஏன் நிறுத்தி வைத்துள்ளீர்கள், விரைந்து அனுமதி பெற்று முடிக்குமாறு ஒப்பந்ததாரிடம் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது கம்பராய பெருமாள் கோயில் நிர்வாக அலுவலர் நதியா மற்றும் வழக்கறிஞர் துரை நெப்போலியன், வேல்பாண்டியன் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி