உத்தமபாளையம் தாலுகாவில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், நடப்போம் நலம்பெறுவோம் விழிப்புணர்வு நடைபயணம் தேனி கலெக்டர் மேற்கொண்டார்.
உத்தமபாளையம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேற்று வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, வாரச்சந்தை, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், உரக்கிட்டங்கி, நியாயவிலைக்கடை மற்றும் இதர பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இன்று நடப்போம் நலம் பெறுவோம் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து காலை 6 மணிக்கு நடைபயணம் தொடங்கிய கலெக்டர் சஜீவனா, உத்தமபாளையம் கிராம சாவடி, புதூர், உ. அம்பாசமுத்திரம், உஅம்மாபட்டி வரை சென்றார். இவருடன் தேனி வடக்கு மாவட்ட தி. மு. க. செயலாளர் தங்கதமிழ்செல்வன், சென்றார். தொடர்ந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.