தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், திருட்டு, வழிப்பறி மற்றும் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களையும், நீதிமன்ற விசாரணையில் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விரைந்து கிடைக்கும் வகையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் நீதிமன்ற காவலர்களுக்கும், கஞ்சா கடத்தி விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கும், சைபர்கிரைம் குற்றத்தில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த மோசடி நபரை அதிரடியாக கைது செய்த தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினருக்கும், பல்வேறு பணிகளில் சிறந்து விளங்கிய காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. R. சிவபிரசாத், இ. கா. ப. நற்சான்றிதழ்கள் வழங்கி, மேலும் சிறப்பாக பணிபுரிய தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்