சின்னமனூர் புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு சீல்

84பார்த்தது
தேனி மாவட்டம் சின்னமனூர் நகர் பகுதியில் அரசு அனுமதியின்றி தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலினைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அவர்களின் உத்தரவின் பெயரில் நகர் பகுதியில் உள்ள கடைகளில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலை, மொத்த வீடு பகுதி மற்றும் அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள நான்கு கடைகளில் அரசு அனுமதி இன்றி புகையிலை குட்கா பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.

இதன் அடிப்படையில் துரித நடவடிக்கை எடுத்த சின்னமனூர் நகராட்சி சுகாதார அலுவலர்கள் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கடைகளில் விற்பனை செய்த புகையிலை குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விற்பனை செய்த கடைகளுக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்து போலீஸ் பாதுகாப்புடன் சட்ட விரோத பொருள்கள் விற்பனை செய்த கடைகளை மூடி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி