தேனி மாவட்டம் க, புதுப்பட்டி பேரூராட்சியில் பகுதிகளில் சுமார் மாதத்திற்கும் மேலாக குடிநீா் விநியோகம் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து தடைபட்டு ஏராளமான வாகனங்கள் அப்படியே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டது
தகவல் அறிந்து அந்த உத்தமபாளையம் காவல் ஆய்வாளா் சந்திரபாண்டி தலைமையிலான போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் ஒரு மணி நேரமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனால் பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனடியாக பேரூராட்சி தலைவர் இங்கு வந்து வாக்குறுதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நீண்ட நேரம் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேரூராட்சி அதிகாரிகளும் போலீஸ் சாரும் சமாதானம் செய்து இன்று இரவுக்குள் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி உறுதி அளித்தனர்.
இதைத்தொடா்ந்து, சாலை மறியலைக் கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனா்