ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை...

75பார்த்தது
ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை...
தேனி மாவட்டம் சின்னமனூர் கருங்கட்டாங்குளம் 24-ம் வார்டு பகுதியில் கடந்த டிசம்பர் நான்காம் தேதி ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையம் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

ஆனால் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்டும் ஒரு மாத காலம் ஆகியும் ஆரம்ப சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு இன்னும் கொண்டு வரப்படவில்லை. சின்னமனூர் அரசு மருத்துவமனை ஊரின் மற்றொரு ஒதுக்குப்புறமாக இருப்பதால் கருங்கட்டான்குளம் மட்டுமல்ல அதை சுற்றி உள்ள பகுதிகளில் ஆரம்பகட்ட மருத்துவ தேவைக்காக கொண்டுவரப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக பணியாளர்களையும் நியமித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி