குமுளியில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக கேரள எல்லை குமுளியில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு குழு என்ற அமைப்பு முல்லைப் பெரியாறு அணை கேரள மக்களை கொள்ளும் தண்ணீர் வெடிகுண்டு என்று கோஷங்கள் எழுப்பி சாலையில் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.