தமிழக எல்லை தேக்கடியில் அமைந்துள்ள தமிழக நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு நலன் கருதி தமிழக நீர்வளத்துறையால் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்நிலையில் பெரியாறு புலிகள் காப்பகத்திற்குள் அனுமதியின்றி கேமரா வைத்ததாக கேரள வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அதனை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவம் தேனி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.