மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார்
இவர் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிந்துபட்டி டாஸ்மாக் கடையின் அருகே நாவர்பட்டியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் என்பவரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து கொலை குற்றவாளியான பொன்வண்ணனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இன்று பொன்வண்ணன் தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து கம்பம் மெட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக கேரளாவிற்கு தப்பிச் செல்ல விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலினைத் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பொன்வண்ணனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது போலீசாரை பார்த்த பொன்வண்ணன் கம்பம் மெட்டு அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியின் அருகே தப்பிச்செல்ல முயற்சி செய்ததாகவும் அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில்
சுந்தரபாண்டி என்ற போலீசார் மற்றும் கொலை குற்றவாளி பொன்வண்ணன் படுகாயம் அடைந்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த பொன் வண்ணனை மற்றும் படுகாயம் அடைந்த சுந்தரபாண்டி என்ற போலீசாரை கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.