கம்பம் செங்கல் சூளையை முற்றுகையிட்ட மக்கள் - பரபரப்பு
தேனி மாவட்டம் தேவாரம் கோணாம்பட்டியில் உள்ள செங்கல் சூளை மக்கள் குடியிருக்கும் பகுதியில் அமைந்துள்ளதால் செங்கல் சூளையில் இருந்து இரவு நேரங்களில் எழும் புகை குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இந்த புகையினால் கால்நடைகள் இறந்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் குழந்தைகள் வயதானவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாக கூறுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து செங்கல் சூளையை பொதுமக்கள் ஏராளமானோர் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.