கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் கருமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கருமாரி கோவிலில் பங்குனி திருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த வருடம் பங்குனி மாதம் முதல் செவ்வாயில் கொடியேற்றமும் இரண்டாம் செவ்வாயில் அலகு குத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஸ்ரீகருமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா. 5 நாட்கள் மிக விமர்சையாக நடைபெறும் இந்த நிகழ்வில் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி,. ஏராளமான பக்தர்கள் முல்லைப்பொரியாறு ஆற்றங்கரையில் இருந்து தீச்சட்டி, பால்குடம் மற்றும் வேல் அலகு குத்தியும் ஊரின் முக்கிய விதிகளில் ஊர்வலமாக வந்தனர்.
இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேல் அலகு குத்தியும் ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவில் முன்பு ஏற்பாடு செய்திருந்த பூக்குழியில் ஏராளமான பக்தர்கள் இறங்கி தீ மிதித்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.