முல்லைப் பெரியாற்றிலிருந்து 18ஆம் கால்வாய் தண்ணீர் திறப்பு

76பார்த்தது
லோயர் கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து 18ம் கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே உள்ள முல்லைப் பெரியாற்றில் தலைமாதகு பகுதியில் இருந்து 18 ஆம் கால் வாய்க்கு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாவில் உள்ள மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில் 44 கண்மாய்களில் தண்ணீரை தேக்கி நிலத்தடிநீர் மூலம் மறைமுகமாக பாசன வசதி பெறுகிறது.

மேலும் நேரடியாக 4 ஆயிரத்து 614. 25 ஏக்கர் விளை நிலங்கள் ஒரு போக பாசன வசதி பெரும் வகையில் 30 நாட்களுக்கு இன்று முதல் 98 கன அடி தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவின் பேரில் தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் முல்லைப் பெரியாறு தலைமதகு பகுதியிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் உத்தமபாளையம் தாசில்தார் சுந்தர்லால் , மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதினெட்டாம் கால்வாய் விவசாய சங்கத்தினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி