சின்னமனூர் அருகே ஆம்னி வேன் - கார் நேருக்கு நேர் மோதல்
தேனி மாவட்டம் சின்னமனூர் தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகே இன்று (ஜன. 01) இரவு சுமார் 8 மணியளவில் சபரிமலை சென்று வந்த ஆம்னி வேன் மற்றும் ஷிப்ட் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஷிப்ட் காரை ஓட்டி வந்த டிரைவருக்கு படுகாயம் ஏற்பட்டது அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சபரிமலை பக்தர்கள் எந்தவித அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து சின்னமனூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்