தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு கள்ளர் பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் கேரள மாநிலத்திற்கு கல்வி சுற்றுலா செல்வதற்காக தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சொந்த செலவில் ஏற்பாடு செய்துள்ளார். கல்வி சுற்றுலா பயணத்தை எம்பி தங்க தமிழ்ச்செல்வன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.