கம்பம் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது

63பார்த்தது
கம்பம் நகராட்சி கூட அரங்கில் மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் பங்கேற்பு

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி கூட அரங்கில் மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில், நகராட்சி ஆணையாளர் உமாசங்கர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 11 வார்டு நகர மன்ற உறுப்பினர் சாதிக் கம்பம் முகைதீன் ஆண்டவர்புரம் தொடக்கப்பள்ளியில் பள்ளியில் மராமத்து பணிகள் செய்ய வேண்டும் , கம்பம் நகர் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை விரைவாக அகற்றி சுகாதாரப் பணி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து 26 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் செந்தில்குமார் உழவர் சந்தை பகுதியில் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்து கடையில் வைத்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரிக்கை வைத்தார்

இதற்கு பதிலளித்த நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் கவுன்சிலரின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்றார்.

இந்த நகர்மன்ற கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்த ஆணையாளர் உமா சங்கர் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து தீர்வு காணப்படும் என்றார் இந்த நகர மன்ற கூட்டத்தில் நகராட்சி, பொறியாளர் அய்யனார் , சுகாதார அலுவலர் அரசகுமார், வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியம், உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி