குமுளி அருகே உள்ள முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வுப
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக புதிய கண்காணிப்புக் குழுவினர் தங்களது முதல் ஆய்வை இன்று முல்லைப்பெரியாறு அணையில் மேற்கொள்கின்றனர். தேக்கடி படகுத்துறைக்கு வந்த கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு செய்ய புறப்பட்டுச் சென்றனர். முல்லைப்பெரியாறு பிரதான அணை, பேபி அணை, கேலரி, மதகுகள், சுரங்கப் பாதை மற்றும் சீப்பேஜ் வாட்டர் எனப்படும் கசிவு நீர் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய உள்ளனர்