சின்னமனூர் அருகே மைக் செட் உரிமையாளர்கள் இசைப்போட்டி

59பார்த்தது
சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில் துணை முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒலி பெருக்கியாளர்கள் சார்பில் 11 ஆம் ஆண்டு இசைப்போட்டி திருவிழாவினை நடத்தினார்கள்.

எரசக்கநாயக்கனூர் மலையடிவாரத்தில் உள்ள வலசை காட்டு பகுதியில் திறந்தவெளியில்
நடந்த இந்த போட்டியில் மதுரை, திண்டுக்கல்,
தேனி மாவட்டம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மைக் செட் உரிமையாளர்கள் தங்களின் மைக்செட் உபகரணங்களுடன் வந்து கலந்து கொண்டனர்.

போட்டியில் ஒலிபெருக்கி குழாய்களை தூரத்தில் வரிசையாக கட்டி வைத்து பழங்கால கிராம் போன் மூலம் அந்த ஒலிபெருக்கிகளில் இருந்து துல்லியமாகவும் தெளிவாகவும் அதிக சத்தத்துடன் கூடிய பாடலை ஒலிபரப்பு செய்தனர்.
அதில் சிறந்த ஒலி பெருக்கியாக தெளிவாக வரும் பாடல் ஒலிகளை தேர்வு செய்தனர்.

இந்த இசை போட்டியில் வெற்றி பெற்ற ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு ரொக்க தொகையினை பரிசாக வழங்கினார்கள்.

மேலும் இந்த போட்டியின் போது மைக் செட் உரிமையாளர்கள் கூறுகையில் பொதுமக்கள் மத்தியில் மைக் செட் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வண்ணமாக நலவாரியம் அமைத்து தர வேண்டும்
மேலும் கோவில் திருவிழாக்கள் மற்ற திருவிழாக்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு அரசு அனுமதி தர வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி